
Art and Literature Celebration for Children 2023 | குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் 2023
குழந்தைகள் நல செயல்பாட்டளரான இனியன், பல்லாங்குழி அமைப்பு – சென்னை மற்றும் புறையூர் வெல்ஃபேர் டிரஸ்ட் இணைந்து வருகிற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வினை முன்னெடுத்துள்ளோம். இந்தக் கலை இலக்கிய கொண்டாட்டத்தில் குழந்தைகளை புத்தக வாசிப்பின் மீதும், கலைகளின் மீதும் ஈர்ப்பு ஏற்படுத்த முயற்சிப்பதே இந்த முயற்சி. இந்நிகழ்வில் எளிய அறிவியல் விளக்க நிகழ்வுகள், கோமாளி நிகழ்வுகள், குழந்தைகளே பங்கேற்கும் நாடகம் போன்ற கலைகள் நடைபெறும். கூடவே இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சிறார் எழுத்தாளர்கள் மற்றும் நமது பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் எனப் பலரும் பங்கேற்பார்கள். மேலும் பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் பரிசுப் பைகள் வழங்கப்படும். எங்களது இந்த முயற்சிக்கு உங்களின் பேராதரவையும் நன்கொடைகைகளையும் தாராளமாக தாருங்கள் மேலும் உங்கள் நன்கொடைகளுக்கு வருமானவரி சலுகைகளையும் பெறுங்கள்.